இந்தோனேசியாவின் பாலி கடலில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு


இந்தோனேசியாவின் பாலி கடலில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு
x
தினத்தந்தி 29 Aug 2023 4:33 AM IST (Updated: 29 Aug 2023 8:23 AM IST)
t-max-icont-min-icon

இந்தோனேசியாவின் பாலி கடலில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவானது.

ஐகார்த்தா,

இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் இந்தோனேசியாவின் மாதரத்திற்கு வடக்கே 203 கிமீ (126 மைல்) தொலைவிலும், பூமியின் மேற்பரப்பிற்கு கீழே 516 கிமீ (320.63 மைல்) மிக ஆழமாகவும் இருந்தது என்று EMSC தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

சமூக வலை தளமான எக்ஸ்-ல் (டுவிட்டர்) சில பதிவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்ட வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தாலும், சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

1 More update

Next Story