எகிப்து: அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து; 32 பேர் பலி


எகிப்து:  அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து; 32 பேர் பலி
x

எகிப்தில் அடுத்தடுத்து கார்கள் மோதி கொண்டதில் 32 பேர் உயிரிழந்து உள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

கெய்ரோ,

எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோ மற்றும் மத்திய தரைக்கடல் நகரான அலெக்சாண்டிரியாவை இணைக்கும் நெடுஞ்சாலை ஒன்றில் வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன.

இந்நிலையில், இன்று திடீரென கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின. இதில் பயணிகள் பஸ் ஒன்று மற்றும் பிற வாகனங்களும் சிக்கி கொண்டன.

சில வாகனங்களில் தீப்பற்றி கொண்டது. இந்த சம்பவத்தில் 32 பேர் உயிரிழந்தனர். 63 பேர் காயமடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும், ஆம்புலன்சுகள் உடனடியாக சென்றன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


Next Story