பியூஷ் கோயலிடம் மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்; எதற்காக...?


பியூஷ் கோயலிடம் மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்; எதற்காக...?
x

இந்தியாவில் இருந்து பொருட்கள் இறக்குமதியை டெஸ்லா நிறுவனம் இரட்டிப்பாக்க உள்ளது என்றும் கோயல் கூறினார்.

கலிபோர்னியா,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிரெமன்ட் நகரில் உள்ள டெஸ்லா மின்சார கார் உற்பத்தி ஆலைக்கு மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல் சென்று பார்வையிட்டார்.

இதுபற்றிய தன்னுடைய ஆச்சரியங்களை பகிர்ந்து கொண்ட கோயல், முக்கிய பதவிகளில் இந்தியர்கள் பதவி வகிப்பது மற்றும் டெஸ்லாவின் விநியோக சங்கிலியில், வளர்ந்து வரும் இந்திய தானியங்கி பொருட்களின் விநியோகம் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றி சுட்டி காட்டினார். இந்தியாவில் இருந்து பொருட்கள் இறக்குமதியை டெஸ்லா நிறுவனம் இரட்டிப்பாக்க உள்ளது என்றும் கோயல் கூறினார்.

எனினும், அவருடைய இந்த வருகையின்போது, மஸ்க் இல்லாத அதிருப்தியை கோயல் வெளிப்படுத்தினார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பதிவிட்டார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், எக்ஸ் சமூக ஊடகத்தில் எலான் மஸ்க் வெளியிட்ட செய்தியில், டெஸ்லாவுக்கு நீங்கள் வருகை தந்தது கவுரவம் அளிக்கிறது.

கலிபோர்னியாவுக்கு என்னால் செல்ல முடியாததற்காக மன்னிப்பு கோருகிறேன். ஆனால், வருங்காலத்தில் அவரை சந்திக்கும் ஒரு நாளை எதிர்பார்த்து இருக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.


Next Story