இலங்கையில் அவசர நிலை பிரகடனம்: ஆகஸ்ட் 14-ம் தேதி வரை நீட்டிப்பு


இலங்கையில் அவசர நிலை பிரகடனம்: ஆகஸ்ட் 14-ம் தேதி வரை நீட்டிப்பு
x

இலங்கையில் அமலில் உள்ள அவசரநிலை சட்டம் வருகிற ஆகஸ்ட் -14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு,

இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்சே சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டதும் அவரும் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் பொதுச் சொத்துகள் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள், சேவை விநியோகம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு இலங்கையில் மீண்டும் அவசர நிலையை ரணில் விக்ரமசிங்க கடந்த ஜூலை 19 ஆம் தேதி அறிவித்தாா்.

அதன்பின், நடந்த முடிந்த அதிபர் தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்க முதல்முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை முன் ரணில் பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமலில் உள்ள அவசரநிலை சட்டம் வருகிற ஆகஸ்ட் -14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story