சிகாகோவில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட வெடி விபத்து - 8 பேர் படுகாயம்


சிகாகோவில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட வெடி விபத்து - 8 பேர் படுகாயம்
x

Image Courtesy : @CFDMedia twitter

கட்டிடத்தில் இருந்து கண்ணாடிகளும், கற்களும் அந்த பகுதி முழுவதும் வெடித்துச் சிதறின.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் உள்ள சவுத் ஆஸ்டின் பகுதியில் 4 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த கட்டிடத்தின் மேல் தளம் முற்றிலுமாக சிதைந்தது. மேலும் கட்டிடத்தில் இருந்து கண்ணாடிகளும், கற்களும் அந்த பகுதி முழுவதும் வெடித்துச் சிதறின.

இது குறித்து தகவல் அறிந்து உடனடியாக சிகாகோ தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கட்டிட இடிபாடுகளில் படுகாயங்களுடன் சிக்கி இருந்த 8 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கட்டிடத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அந்த கட்டிடத்தில் கடந்த 12 ஆண்டுகளாக வருடாந்திர பராமரிப்பு சோதனைகளை மேற்கொள்ளவில்லை எனவும், புகைமானிகளை மாற்றாமல் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Next Story