நிழல் அரசாங்கம்.. எலான் மஸ்க் உயிருக்கு ஆபத்து..! தந்தை அச்சம்


நிழல் அரசாங்கம்.. எலான் மஸ்க் உயிருக்கு ஆபத்து..! தந்தை அச்சம்
x

அரசு வகுக்கும் திட்டங்களிலும், எடுக்கும் முடிவுகளிலும் மஸ்க் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துவதாக கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டெஸ்லா நிறுவன சிஇஓ எலான் மஸ்க் குறித்து அமெரிக்காவின் பிரபலமான "தி நியூ யார்க்கர்" எனும் பத்திரிகை செய்தி கட்டுரை வெளியிட்டிருந்தது.

"எலான் மஸ்கின் நிழல் ஆதிக்கம்" என தலைப்பிடப்பட்ட அந்த கட்டுரையில், "அரசின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் மஸ்க்கின் தாக்கம் இருக்கிறது. விண்வெளி ஆதிக்கம், உக்ரைன் போர், சமூக வலைதளம் கட்டுப்பாடுகள், மின்சார வாகனங்கள் குறித்த சட்டங்கள் உட்பட பல விஷயங்களில் அரசு வகுக்கும் திட்டங்களிலும், எடுக்கும் முடிவுகளிலும் மஸ்க் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துகிறார். உக்ரைன் போரில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் விண்கலன்கள் முக்கிய பங்காற்றியது. மஸ்க், டுவிட்டரை விலைக்கு வாங்கிய பிறகு தனக்கு உலக அரங்கில் மிகவும் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடனே அறிவித்தார்" என கூறப்பட்டிருந்தது.

ஆனால் இந்த கட்டுரையின் நோக்கத்தை எலான் மஸ்க்கின் தந்தை எர்லால் மஸ்க் (வயது 77) கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், தனது மகன் உயிருக்கு ஆபத்து வரலாம் என அச்சப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தி நியூ யார்க்கரின் கட்டுரையை ஹிட் ஜாப் என்று கூறிய அவர், எலான் மஸ்க்கை வலுவிழக்கச் செய்யும் நிழல் அரசாங்கம் அதை ஆதரிக்கிறது என்று குற்றம் சாட்டினார். தாக்குதலுக்கு முன் எதிரியை பலவீனப்படுத்துவதற்கும், அத்தகைய நிகழ்வுக்கு மக்களை தயார்படுத்துவதற்குமான தந்திரத்தை அந்த கட்டுரையுடன் ஒப்பிட்டார்.

இந்த நிழல் அரசாங்கம் எலான் மஸ்க்கை கொல்ல முயற்சிக்கலாம் என்று பயப்படுகிறீர்களா? என்று கேட்டதற்கு "ஆம்" என்று எரோல் பதிலளித்தார்.


Next Story