திரைப்படமாகும் 'எலான் மஸ்க்' வாழ்க்கை வரலாறு... வெளியான புதிய அறிவிப்பு...!


திரைப்படமாகும் எலான் மஸ்க் வாழ்க்கை வரலாறு... வெளியான புதிய அறிவிப்பு...!
x

உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராக உள்ளது.

வாஷிங்டன்,

உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவருமானவர் எலான் மஸ்க். இவர் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றி அதனை 'எக்ஸ்' என பெயர் மாற்றம் செய்திருந்தார். மேலும் பல முக்கிய அதிகாரிகளை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அவர் அந்த செயலியில் செய்த மாற்றங்கள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதன்மூலம் அவர் உலகம் முழுவதும் பிரபலமடைந்தார்.

தென்னாபிரிக்காவில் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்தவர் எலான் மஸ்க். அவர் எப்படி உலக பணக்காரர் ஆனார் என்பதை பிரபல அமெரிக்க எழுத்தாளர் வால்டர் ஐசக்சன் புத்தகமாக எழுதி இருந்தார். அந்த புத்தகத்தில் அவரது சிறுவயது முதல் நடந்த முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது. உலகம் முழுவதும் அந்த புத்தகம் பலரின் கவனத்தை பெற்று விற்பனையில் சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்த புத்தகத்தை மையமாக வைத்து எலான் மஸ்க் வாழ்க்கை திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை அமெரிக்க திரைப்பட இயக்குநரான டேரன் அரோனோபிஸ்கி இயக்க உள்ளார். இவர் தி வேல், மதர், பை (Pi) உள்ளிட்ட பிரபல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தினை ஏ24 என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது.


Next Story