கலிபோர்னியாவில் உள்ள வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் தீ விபத்து


கலிபோர்னியாவில் உள்ள வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் தீ விபத்து
x

தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து அரை மணி நேரத்திற்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பர்மாங்க் பகுதியில் ஹாலிவுட்டின் மிகப்பெரிய படத்தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் ஸ்டுடியோ அமைந்துள்ளது. இந்த ஸ்டுடியோவில் உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இந்த தீ அருகில் இருந்த பார்க்கிங் கட்டிடத்திற்கும் பரவியதால் வானில் கரும்புகை கிளம்பியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து சுமார் அரை மணி நேரத்திற்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் ஸ்டுடியோவில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story