அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு

image credit: ndtv.com
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பிடனுக்கு கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் கானப்பட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அவரது கணவவரும் அதிபருமான ஜோ பிடன் இரண்டாவது முறையாக வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தற்போது அவரின் மனைவிக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அவர் தற்போது உரிய சிகிச்சையை எடுத்தவாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story






