ஜோர்டானில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து தரைமட்டம் - 5 பேர் பலி


ஜோர்டானில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து தரைமட்டம் - 5 பேர் பலி
x

ஜோர்டானில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டம் ஆனதில் 5 பேர் பலியாகினர்.

அம்மான்,

ஜோர்டான் நாட்டின் தலைநகர் அம்மானில் உள்ள 4 மாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று நேற்று முன்தினம் மாலை திடீரென இடிந்து விழுந்தது. 4 மாடி கட்டிடம் நொடிப்பொழுதில் சீட்டுக்கட்டு போல சரிந்து தரைமட்டமானதில் அந்த கட்டிடத்தில் இருந்த 25 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.

இதையடுத்து அங்கு தீயணைப்பு வீரர்கள், போலீசார் என 100-க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

எனினும் 5 பேரை பிணமாகத்தான் மீட்கப்பட்டது. அதே சமயம் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே கட்டிட இடிபாடுகளில் இன்னும் 10-க்கும் அதிகமானோர் சிக்கியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

எனினும் அவர்களை பத்திரமாக மீட்பதற்கான முயற்சியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story