தினமும் உணவில் போதை மருந்து: மனைவியை 10 வருடங்களாக விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன் ; 50 பேர் கைது


தினமும் உணவில் போதை மருந்து: மனைவியை 10 வருடங்களாக விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன் ; 50 பேர் கைது
x
தினத்தந்தி 22 Jun 2023 10:05 AM GMT (Updated: 22 Jun 2023 10:16 AM GMT)

தினமும் உணவில் போதைமருந்து கலந்து மனைவியை அவருக்கே தெரியாமல் 10 வருடங்களாக விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டனர்.

பாரீஸ்,

பிரான்சை சேர்ந்த லி டொமினிக் என்பவர் தினமும் இரவில் மனைவி பிரான்சுவாவுக்கு போதை மருந்து கொடுத்து பல ஆண்களுக்கு விருந்தாக்கி உள்ளார்.

மனைவிக்கு சந்தேகம் வராமல் டொமினிக் 10 ஆண்டுகளாக இந்தக் கொடுமையைத் செய்து உள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 91 முறை அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். இவை அனைத்தையும் வீடியோ எடுத்து வைத்து உள்ளார்.

மனைவிக்கு உணவில் லோரஸெபம் என்ற மருந்தை கலந்து கொடுத்து உள்ளார்.

தெற்கு பிரான்சில் உள்ள அவிக்னான் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இந்த குற்ற செயலில் 83 பேரை ஈடுபடுத்தி உள்ளார். இவர்கள் 26 முதல் 73 வயதுக்கு உட்பட்டவர்கள் என கண்டறியப்பட்டு உள்ளது. 83 பேரில் 51 பேரை கைது செய்து உள்ள போலீசார் அவர்கள் மீது 92 வழக்குகளை பதிவு செய்து உள்ளனர். மற்றவர்களை அடையாளம் காணமுடியவில்லை.

குற்றவாளிகளில் தீயணைப்பு வீரர், லாரி டிரைவர், நகராட்சி கவுன்சிலர், வங்கி ஊழியர், ஐடி ஊழியர், சிறைக்காவலர், செவிலியர் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளனர்.

விபசாரத்திற்கு வாடிக்கையாளர்களை அழைத்து வந்த கணவர் புகையிலை மற்றும் வாசனை திரவியம் போன்ற வாசனை பொருட்களை பயன்படுத்த கூடாது. மேலும், வீட்டிற்கு வரும் ஆண்கள் குளியலறையில் ஆடைகளை அவிழ்ப்பதற்கு பதிலாக சமையலறையில் ஆடைகளை அவிழ்க்கச் சொல்வார். மனைவியின் அறைக்குச் செல்வதற்கு முன்பு வெந்நீரில் கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும் என கூறி உள்ளார்.

வாகனங்களை அருகில் உள்ள பள்ளி அருகே விட்டுவிட்டு இருட்டில் நடந்து சந்தேகப்படாமல் வீட்டுக்கு வரச் சொல்லி உள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர், இது குறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகளிடம்,இப்படி நடப்பது தங்களுக்குத் தெரியாது என்றும், சிலர் அவருடைய மனைவி தான் என்று தெரியாது என கூறி உள்ளனர்.


Next Story