ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு: துருக்கியிடம் இயற்கை எரிவாயு வாங்க ஹங்கேரி பேச்சுவார்த்தை


ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு: துருக்கியிடம் இயற்கை எரிவாயு வாங்க ஹங்கேரி பேச்சுவார்த்தை
x

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியிலும் கச்சா எண்ணெய் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது.

புடாபெஸ்ட்,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன்மீது பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. அதற்கு பதிலடியாக ரஷியாவும் அந்த நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதித்தது.

இதனால் ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன் ஒருபகுதியாக மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியிலும் கச்சா எண்ணெய் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. இதனால் அந்த நாட்டின் பொதுமக்களே ரஷியா மீதான இந்த பொருளாதார தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில் தற்போது துருக்கியிடம் இருந்து இயற்கை எரிவாயுவை வாங்குவதற்கும், அசர்பைஜான் நாட்டில் இருந்து வாங்கும் எரிவாயுவை துருக்கி வழியாக கொண்டு செல்வதற்கும் அந்த நாட்டின் அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஹங்கேரிய வெளியுறவுத்துறை மந்திரி பீட்டர் சிஜார்டோ தெரிவித்தார்.


Next Story