அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பிய நபருக்கு 33 மாதங்கள் சிறை தண்டனை!


அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பிய நபருக்கு 33 மாதங்கள் சிறை தண்டனை!
x

பல்வேறு அரசாங்க அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபரை மிரட்டியதற்காக ஜார்ஜியாவைச் சேர்ந்த ஒரு நபருக்கு 33 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த நபர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார்.

ஜார்ஜியாவின் பார்னெஸ்வில்லியை சேர்ந்தவர் 56 வயதான டிராவிஸ் பால். இவர் உள்ளூர் நீதிபதிகள், சட்ட அமலாக்கத்திற்கு எதிராக பல கொலை மிரட்டல்கள் அனுப்பியுள்ளார்.ஒரு வித வெள்ளை தூள் போன்ற பொருள் அடங்கிய அச்சுறுத்தல் கடிதம் பல அனுப்பியுள்ளார்.

டிராவிஸ் பால் பல்வேறு உள்ளூர் மற்றும் மாவட்ட அரசாங்க அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார். அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் விசாரணையில், இவர் மற்றொரு நபரின் பெயரை மாற்றுப்பெயராகப் பயன்படுத்தி இதுபோன்ற தொடர்ச்சியான கடிதங்களை அனுப்பி வருவது தெரியவந்தது.

இதனையடுத்து அவர் 7,500 அமெரிக்க டாலர் அபராதம் செலுத்த வேண்டும் மற்றும் 33 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தலைமை அமெரிக்க மாவட்ட நீதிபதி மார்க் டிரெட்வெல் உத்தரவிட்டார்.

1 More update

Next Story