சலுகைகளை குறைக்கும் கூகுள் நிறுவனம்... சுந்தர் பிச்சையிடம் கேள்வி எழுப்பிய ஊழியர்கள்- சிஇஓ-வின் பதில் என்ன?


சலுகைகளை குறைக்கும் கூகுள் நிறுவனம்... சுந்தர் பிச்சையிடம் கேள்வி எழுப்பிய ஊழியர்கள்- சிஇஓ-வின் பதில் என்ன?
x

Image Courtesy: AFP   

பயண வரவு செலவுகள் மற்றும் பிற சலுகைகளை குறைப்பது என ஏன் கூகுள் ஊழியர்கள் சுந்தர் பிச்சையிடம் கேள்வி எழுப்பி உள்ளனர்.

வாஷிங்டன்,

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை. இவரது தலைமையில் நிறுவனத்தின் அனைத்துக் குழு கூட்டம் சமீபத்தில் நடைப் பெற்றது. இதில் கூகுள் நிறுவனத்தின் பல்வேறு துறை சார்ந்த ஊழியர்கள் பங்கேற்று இருந்தனர்.

இந்த கூட்டத்தில் கூகுள் நிறுவன ஊழியர்கள் ஊதிய குறைப்பு தொடர்பான பல அடுக்கடுக்கான கேள்விகளை சுந்தர் பிச்சையிடம் எழுப்பி உள்ளனர். குறிப்பாக நிறுவனத்திற்கு அதிக லாபம் கிடைக்கும் போதிலும் தங்களின் பயண வரவு செலவுகள் மற்றும் பிற சலுகைகளை குறைப்பது ஏன் என ஊழியர்கள் சுந்தர் பிச்சையிடம் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதற்கு பதில் அளித்த பேசிய சுந்தர் பிச்சை, " சலுகைகளை பொறுத்த வரையில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள கடினமான பொருளாதார நிலைமைகளின் மூலம் நாம் சற்று பொறுப்புடன் இருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு நிறுவனமாக, இதுபோன்ற தருணங்களைச் சந்திக்க நாம் ஒன்றிணைவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.

கூகுள் நிறுவனம் பிரபலமடைவதற்கு முன் எவ்வளவு சிறியதாக இருந்தது என எனக்கு நினைவு இருக்கிறது. நாம் எப்போதும் வேடிக்கையை பணத்துடன் ஒப்பிடக்கூடாது. நீங்கள் கடினமாக உழைக்கும் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்குள் நுழையும் போது அங்கு ஊழியர்கள் வேடிக்கையாக இருப்பதை பார்க்கலாம். ஆனால் அந்த வேடிக்கை எப்போதும் பணத்திற்கு சமமாக இருக்கக்கூடாது" என்றார்.


Next Story