கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பி ஓட்டமா? சபாநாயகர் விளக்கம்


கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பி ஓட்டமா? சபாநாயகர் விளக்கம்
x

கோத்தபய ராஜபக்சே இலங்கை அருகில் உள்ள ஒருநாட்டில் தங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

கொழும்பு,

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தள்ளது. போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்ததையடுத்து, பதறிப்போன கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தார்.

கோத்தபய ராஜபக்சே கடற்படை முகாம் தளத்தில் தங்கியிருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் இலங்கை அருகில் உள்ள ஒருநாட்டில் தங்கி இருப்பதாகவும் புதிய தகவல்கள் வெளியாகின. புதன்கிழமை கோத்தபய ராஜபக்சே நாடு திரும்புவார் என்றும் கூறப்பட்டது.

ஆனால், இந்த தகவல்களை முற்றிலும் இலங்கை சபாநாயகர் மகிந்த யாப்பா மறுத்துள்ளார். இது குறித்து மகிந்த யாப்பா கூறும் பொழுது, "அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து வெளியேறியதாக வெளியான தகவல் உண்மையில்லை.கோத்தபய ராஜபக்சே இலங்கையில்தான் இருக்கிறார்"என்றார்.

1 More update

Next Story