பாலியல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு மேலும் 16 ஆண்டு சிறை


பாலியல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு மேலும் 16 ஆண்டு சிறை
x

நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றத்துக்காக ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் (வயது 68) தன்னிடம் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக 'மீடூ'வில் புகார் கூறப்பட்டது.

ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, ராஸ் மெக்கோவன், அன்னபெல்லா, ஜேன் டோ உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் கூறினார்கள். இந்த புகார்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

2006-ல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக திரைப்பட தயாரிப்பு பெண் நிர்வாகி மிமி ஹலேயியும், 2013-ல் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக நடிகை ஒருவரும் தொடர்ந்த வழக்குகளில் ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பளித்தது. தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சூழலில் 2013-ம் ஆண்டு ஹார்வி வெய்ன்ஸ்டீன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக இத்தாலி நாட்டை சேர்ந்த நடிகை தொடர்ந்த வழக்கை லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கோர்ட்டு விசாரித்து வந்தது. இதில் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றத்துக்காக ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


Next Story