கனடாவில் இந்து கோவிலை சேதப்படுத்தி இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதியதால் பதற்றம் - இந்தியா கடும் கண்டனம்!


கனடாவில் இந்து கோவிலை சேதப்படுத்தி இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதியதால் பதற்றம் - இந்தியா கடும் கண்டனம்!
x
தினத்தந்தி 15 Sept 2022 2:06 PM IST (Updated: 15 Sept 2022 2:09 PM IST)
t-max-icont-min-icon

கனடாவில் உள்ள முக்கியமான இந்து கோவில், சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு இந்தியத் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

டொரன்டோ,

கனடாவில் உள்ள முக்கியமான இந்து கோயில், பயங்கரவாதிகளால் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு இந்தியத் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கனடாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான டொரன்டோவில் பாப்ஸ் சுவாமிநாராயண் கோயில் அமைந்துள்ளது.இந்நிலையில், சுவாமிநாராயண் கோவில் சேதப்படுத்தப்பட்டு, கோயில் சுவரில் 'காலிஸ்தான் ஜிந்தாபாத்' என்று எழுதப்பட்டிருந்தது.

டொராண்டோவில் உள்ள சுவாமி நாராயண் கோயிலின் சுவர்களில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதற்கு கனடாவில் உள்ள இந்திய உயர் ஆணையரகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கோவிலின் சுவர்களில் இந்தியாவுக்கு எதிராக, காலிஸ்தானுக்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சதிச்செயலை செய்தவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து எந்த தகவலும் வரவில்லை.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஆணையரகம், கனடா நிர்வாகத்தை இது குறித்து விசாரணை செய்து குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா எம்.பி சோனியா சித்து டுவிட்டரில் பதிவிட்டு, 'டொராண்டோவில் உள்ள சுவாமிநாராயண் கோயிலில் நடந்த சம்பவத்தால் நான் மனவேதனை அடைகிறேன்.நாம் ஒரு பன்முக கலாச்சார மற்றும் பலமத நாட்டில் வாழ்கிறோம், அங்கு அனைவரும் பாதுகாப்பாக உணர வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.

சுவாமி நாராயண் கோயில் சுவர்களில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டதற்கு இந்தியா சார்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்திய உயர் ஆணையரகம் தனது டுவிட்டர் பதிவில், 'டொராண்டோவில் அமைந்துள்ள சுவாமி நாராயண் கோவிலுக்கு சேதம் விளைவித்து, இந்தியாவுக்கு எதிரான விஷயங்களை எழுதியதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கனடா அதிகாரிகள் விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படுகிறார்கள்' என்று பதிவிட்டுள்ளது.

1 More update

Next Story