டுவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓ-ஆக லிண்டா யக்காரினோ பொறுப்பேற்றார்!


டுவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓ-ஆக லிண்டா யக்காரினோ பொறுப்பேற்றார்!
x

மஸ்க்கின் டுவிட்டர் 2.0-வை உருவாக்க தான் உறுதியுடன் இருப்பதாகவும் லிண்டா அப்போது தெரிவித்திருந்தார். டுவிட்டரின் வணிக செயல்பாடுகளை இவர் கவனிப்பார் என தெரிகிறது.

வாஷிங்டன்,

கடந்த ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார் எலான் மஸ்க். பயனர்கள் தங்களது கருத்துகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் இந்த தளத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அவர் செய்தார். பயனர்களுக்கு சந்தா கட்டணம் தொடங்கி ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது என அவரது நடவடிக்கைகள் ஆடிப்போனது டுவிட்டனர். இந்தச் சூழலில் லிண்டாவை புதிய சிஇஓ என மஸ்க் அறிவித்தார். அதோடு டுவிட்டர் நிறுவனத்தின் நிர்வாக தலைமை மற்றும் சிடிஓ என தனது செயல்பாடு இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓ-ஆக தனது பணியை தொடங்கினார் லிண்டா யக்காரினோ.

டுவிட்டர் வளர்ச்சிக்காக எலன் மஸ்க்குடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி என தெரிவித்தார். மஸ்க்கின் டுவிட்டர் 2.0-வை உருவாக்க தான் உறுதியுடன் இருப்பதாகவும் லிண்டா அப்போது தெரிவித்திருந்தார். டுவிட்டரின் வணிக செயல்பாடுகளை இவர் கவனிப்பார் என தெரிகிறது.

கடந்த டிசம்பரில் டுவிட்டர் சி இ ஓ பதவியில் இருந்து தாம் விலக வேண்டுமா என எலான் மஸ் கருத்து கேட்டதற்கு 57.5% பேர் ஆம் என்று பதிலளித்திருந்தனர்.

லிண்டா யாக்காரினோ 10 ஆண்டுகளுக்கும் மேலாக என்பிசி யுனிவர்சல் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். நிறுவனத்தின் விளம்பர செயல்திறனை அளவிடுவதற்கான ஒரு தொழில்துறை வழக்கறிஞராக அவர் செயல்பட்டார். மேலும் அந்நிறுவனத்தின் விளம்பர விற்பனையின் தலைவராகவும் இருந்துள்ளார். டர்னர் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் சுமார் 19 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர். அவர் பென்சில்வேனியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஆவார்.


Next Story