இம்ரான்கானுக்கு ஆதரவாக முன்னாள் மனைவி டுவிட்டர் பதிவு


இம்ரான்கானுக்கு ஆதரவாக முன்னாள் மனைவி டுவிட்டர் பதிவு
x

இம்ரான்கான் விடுதலை செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தும், அவருக்கு ஆதரவாகவும் அவரது முன்னாள் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தன் மீதான ஊழல் வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஆஜராக சென்றபோது, அந்த நாட்டு துணை ராணுவம் அவரை அதிரடியாக கைது செய்தது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, முன்தினம் இம்ரான்கானுக்கு 2 வாரங்கள் ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு விடுதலை செய்தது.

இந்த நிலையில் இம்ரான்கான் விடுதலை செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தும், அவருக்கு ஆதரவாகவும் அவரது முன்னாள் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

விவாகரத்து பெற்று பிரிந்த பின்னரும் இம்ரான்கானின் விடுதலையை ஆதரித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதை நெட்டிசன்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

1 More update

Next Story