இந்தியா-ரஷ்யா போர் பயிற்சி - திடீரென நேரில் சென்ற ரஷிய அதிபர் புதின்...!


இந்தியா-ரஷ்யா போர் பயிற்சி - திடீரென நேரில் சென்ற ரஷிய அதிபர் புதின்...!
x

ராணுவ பயிற்சியில் கோர்க்கா ரைஃபிள்ஸ் படையை சேர்ந்த இந்திய ராணுவக் குழுவினர் பங்கேற்றுள்ளனர்.

மாஸ்கோ,

'வோஸ்டாக் - 2022' எனப்படும் பல்முனை ராணுவ உக்தி மற்றும் செயல்திறன் பயிற்சி, ரஷ்யாவின் கிழக்கு ராணுவ மாவட்ட செர்ஜியேவ்ஸ்கி பயிற்சி மைதானத்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கியது.

இந்த ராணுவ பயிற்சியில் கோர்க்கா ரைஃபிள்ஸ் படையை சேர்ந்த இந்திய ராணுவக் குழுவினர் பங்கேற்றுள்ளனர். 7 நாட்களில் கூட்டு களப்பயிற்சிகள், போர் விவாதங்கள் மற்றும் வீர, தீர பயிற்சிகளில் இந்திய ராணுவ குழுவினர் ஈடுபடுகின்றனர்.

இந்த பயிற்சி பிற ராணுவக் குழுக்கள், பார்வையாளர்களிடையே தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. ராணுவ செயல்முறைகளை நடைமுறைப்படுத்துதல், புதிய தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்டவற்றை குறித்து பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியா, சீனா உள்ளிட்ட ரஷ்ய நட்பு நாடுகள் பங்கு கொண்டுள்ள மிகப்பெரிய அளவிலான கூட்டு ராணுவ பயிற்சியை ரஷ்ய அதிபர் புதின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கூட்டு ராணுவப் பயிற்சிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.


Next Story