உலகளவில் அமெரிக்க விசா பெறுவதில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 2-ம் இடம் பிடிக்கும் - அமெரிக்க தூதரகம் தகவல்


உலகளவில் அமெரிக்க விசா பெறுவதில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 2-ம் இடம் பிடிக்கும் - அமெரிக்க தூதரகம் தகவல்
x

உலகளவில் அமெரிக்க விசா பெறுவதில் முதலிடம் வகிக்கும் மெக்சிகோவை தொடர்ந்து இந்தியா முன்னேறி வருகிறது.

புதுடெல்லி,

அமெரிக்க விசா பெறுவதில் 2023ஆம் ஆண்டுக்குள் சீனாவை விட இந்தியா எண்ணிக்கையில் முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் அமெரிக்க விசா பெறுவதில் முதலிடம் வகிக்கும் மெக்சிகோவை தொடர்ந்து அதற்கு அடுத்த இடத்திற்கு இந்தியா முன்னேறி வருகிறது. இது குறித்து அமெரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது,

அடுத்த ஆண்டுக்குள் அமெரிக்க விசா பெறுவதில் இந்தியா 2வது இடத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.விசா வழங்குவதில் அமெரிக்காவிற்கு இந்தியா தான் இப்போது முதலிடத்தில் உள்ளது. மாணவர்கள், உயர் தொழில்நுட்பப் பணியாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகம் ஆகிய பிரிவுகள் உள்ளன. விசாக்களுக்கு விண்ணப்பித்திருந்த இந்தியர்களுக்காக அடுத்த கட்டமாக நவம்பர் மாதம் அப்பாயிண்ட்மென்ட்கள் வெளியிடப்படும் என்று அமெரிக்க தூதரக அதிகாரி தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ஹெச் - எல் விசாக்களுக்கு விண்ணப்பித்திருந்த இந்தியர்களுக்காக கடந்த அக்டோபரில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான அப்பாயிண்ட்மென்ட்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story