பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் மரணம் - 200 பேரை விடுதலை செய்ய அரசாங்கம் முடிவு


பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் மரணம் - 200 பேரை விடுதலை செய்ய அரசாங்கம் முடிவு
x
தினத்தந்தி 9 May 2023 6:34 AM IST (Updated: 9 May 2023 10:08 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் மரணம் அடைந்துள்ளார்.

இஸ்லாமாபாத்,

இந்திய கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு 651 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அந்த நாட்டின் கராச்சி சிறையில் தற்போது அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் 631 மீனவர்களின் தண்டனை காலம் முடிந்து நாடு திரும்புவதற்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கராச்சி சிறையில் இருந்த இந்திய மீனவர் ஒருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இந்த நிலையி்ல் வருகிற 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 199 இந்திய மீனவர்களை விடுதலை செய்யப்பட உள்ளதாக அந்த நாட்டின் அரசாங்கம் கூறி உள்ளது. அதன்படி முதலில் லாகூருக்கு அனுப்பப்பட்டு பின்னர் வாகா எல்லையில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

1 More update

Next Story