ஐரோப்பாவில் இந்திய மாம்பழங்களுக்கான சந்தையை உருவாக்கும் வகையில் மாம்பழத் திருவிழா!


ஐரோப்பாவில் இந்திய மாம்பழங்களுக்கான சந்தையை உருவாக்கும் வகையில் மாம்பழத் திருவிழா!
x

விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெல்ஜியத்தில் மாம்பழத் திருவிழாவை பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்

பிரஸ்ஸல்ஸ் [பெல்ஜியம்],

ஐரோப்பாவில் இந்திய மாம்பழங்களுக்கான சந்தையை உருவாக்கவும் ஐரோப்பியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பிரஸ்ஸல்ஸில் ஏற்பாடு செய்யப்பட்ட "மாம்பழத் திருவிழாவை" மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்த்ரி பியூஷ் கோயல் நேற்று தொடங்கி வைத்தார். .

உலகிற்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் பெரும்பாலும் மாம்பழங்கள் ஐரோப்பாவிற்கு வருவதை விட மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கின்றன.

பெல்ஜியம், லக்சம்பர்க் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா கூறுகையில், ஐரோப்பிய சந்தையில் இந்திய மாம்பழத்திற்கென மகத்தான சந்தை மதிப்பு உள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய தூதரகத்தின் வேளாண்மை மற்றும் கடல்சார் பொருட்கள் ஆலோசகர் டாக்டர் ஸ்மிதா சிரோஹி கூறியதாவது, " பெல்ஜியத்தைப் பொறுத்த வரையில், லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து அதிகளவில் மாம்பழங்கள் வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் மையமான பெல்ஜியத்தில், இந்திய மாம்பழங்களை ஐரோப்பிய சந்தையில் காட்சிப்படுத்தவே பெல்ஜியத்தில் "மாம்பழத் திருவிழா" நடத்தப்படுகிறது" என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏழு வகையான மாம்பழங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன - ஆந்திராவை சேர்ந்த பங்கனாபள்ளி, உத்தரபிரதேசத்தில் இருந்து மலிஹாபாத் தஷேரி, ஒடிசாவை சேர்ந்த அம்ரபாலி, லக்ஷ்மன் போக், ஹிம்சாகர், ஜர்தாலு மா, லாங்க்ரா ஆகிய மாம்பழங்கள் பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டன.

இது குறித்து, ஆன்லைன் மாம்பழ வியாபாரி ஒருவர் கூறுகையில், "அல்பான்சோ, கேசர் மற்றும் பங்கனாபள்ளி ஆகிய மாம்பழ வகைகள், ஐரோப்பாவில் அதிக தேவை காரணமாக மிகப்பெரிய சந்தையைக் கொண்டுள்ளன. இது போன்ற நிகழ்வுகள் ஐரோப்பாவில் இந்திய மாம்பழங்கள் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்தும்" என்றார்.


Next Story