இந்திய வம்சாவளி தூதருக்கு அமெரிக்க துணை அதிபர் பதவி பிரமாணம்


இந்திய வம்சாவளி தூதருக்கு அமெரிக்க துணை அதிபர் பதவி பிரமாணம்
x

இந்திய வம்சாவளி தூதருக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவி பிரமாணம் செய்து வைத்து உள்ளார்.



வாஷிங்டன்,


அமெரிக்காவில் அதிபர் பைடனின் அரசாங்கத்தில் துணை அதிபராக பதவி வகித்து வருபவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ். இந்நிலையில், நெதர்லாந்து நாட்டுக்கான அடுத்த அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியான ஷெபாலி ரஸ்தான் டுகால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்திய அமெரிக்க அரசியல்வாதியான ஷெபாலியின் நியமனத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்து உள்ளது. அவருக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவி பிரமாணம் செய்து வைத்து உள்ளார்.

இந்தியாவின் காஷ்மீரை சேர்ந்தவரான ஷெபாலி அமெரிக்காவின் மியாமி பல்கலை கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர். நியூயார்க் பல்கலை கழகத்தில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார்.

இதுபற்றி கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நெதர்லாந்துக்கான அடுத்த அமெரிக்க தூதராக ஷெபாலி ரஸ்தான் டுகாலை நியமிப்பதற்கான சிறப்புரிமை பெற்றுள்ளேன். இந்த புதிய பணியில் சிறப்புடன் செயலாற்ற வாழ்த்துகிறேன். உங்களது தலைமைத்துவத்திற்காக நன்றி என தெரிவித்து உள்ளார்.


Next Story