எடை தூக்கும் கருவி கழுத்தில் விழுந்து ஜிம் பயிற்சியாளர் பலி


எடை தூக்கும் கருவி கழுத்தில் விழுந்து ஜிம் பயிற்சியாளர் பலி
x

ஜிம் பயிற்சியாளரின் கழுத்து முறிந்து உயிரிழந்தார்.

பாலி,

இந்தோனேசியாவின் பாலி நகரை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் ஜெஸ்டின் விக்கி (வயது 33). இவர் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் ஜெஸ்டின் பிரபலமான நபராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 15-ம் தேதி ஜெஸ்டின் வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். எடை தூக்கும் கருவியை (barbell) கொண்டு உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது திடீரென எடை தூக்கும் கருவி ஜெஸ்டின் கழுத்தில் விழுந்தது.

அதிக எடை கொண்ட எடை தூக்கும் கருவி கழுத்தில் விழுந்ததில் ஜெஸ்டினின் கழுத்து முறிந்தது. இந்த சம்பவத்தில் ஜெஸ்டின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story