இந்தோனேசியாவில் வெடிக்கத் தொடங்கிய மெராபி எரிமலை - பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றம்


இந்தோனேசியாவில் வெடிக்கத் தொடங்கிய மெராபி எரிமலை - பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றம்
x

பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஜகார்தா,

இந்தோனேஷியாவில் உள்ள மெராபி எரிமலை வெடித்துச் சிதற தொடங்கியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 9,721 அடி உயரம் உள்ள இந்த எரிமலையில் இருந்து வெளிவரும் சாம்பல் புகையானது அருகில் உள்ள பகுதிகளை போர்வைபோல் போர்த்தியுள்ளது.

எரிமலையை சுற்றி 7 கி.மீ. வரை யாரும் செல்ல வேண்டாம் என பொதுமக்களை அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் அங்குள்ள உள்ளூர் மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மெராபி எரிமலை இந்தோனேஷியாவில் உயிர்ப்புடன் உள்ள எரிமலைகளில் ஒன்றாக உள்ளது. இதற்கு முன்பு மெராபி எரிமலை கடந்த 2010-ம் ஆண்டு வெடித்துச் சிதறிய போது, 350 பேர் அதில் சிக்கி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story