ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு, கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை வாழ்த்து


ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு, கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை வாழ்த்து
x

ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு, கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. முடிவில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "சிறந்த இறுதிப்போட்டிகளில் இதுவும் ஒன்று. எப்போதும் போல் டாடா ஐபிஎல் சிறப்பாக இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள்! குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்த ஆண்டு வலுவாக திரும்ப வரும்!" என்று கூறியுள்ளார்.


Next Story