சல்மான் ருஷ்டியை கொல்ல முயன்ற நபருக்கும் ஈரானுக்கும் தொடர்பா.. திட்டவட்டமாக மறுத்த ஈரான்!


சல்மான் ருஷ்டியை கொல்ல முயன்ற நபருக்கும் ஈரானுக்கும் தொடர்பா.. திட்டவட்டமாக மறுத்த ஈரான்!
x
தினத்தந்தி 15 Aug 2022 12:23 PM GMT (Updated: 15 Aug 2022 12:27 PM GMT)

அவரை கொல்ல கத்தியுடன் நுழைந்த மர்ம நபருக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

டெஹ்ரான்,

பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி (வயது 75) மீது கடந்த வாரம் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை ஆற்ற இருந்த சமயத்தில் மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தினார்.

இதில், சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டது. கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த சல்மான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். முதலில் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் ஜாபர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அவரை கொல்ல கத்தியுடன் நுழைந்த மர்ம நபருக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. சல்மான் ருஷ்டியை கொல்ல ஈரான் பின்புலமாக செயல்பட்டது என்ற செய்தியை ஈரான் மறுத்துள்ளது.


Next Story