ஜப்பானில் தொடர்ந்து பிறப்பு விகித சராசரி 1.26 ஆக குறைவு..!!


ஜப்பானில் தொடர்ந்து பிறப்பு விகித சராசரி 1.26 ஆக குறைவு..!!
x

கோப்புப்படம்

ஜப்பானில் கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து பிறப்பு விகித சராசரி 1.26 ஆக குறைந்துள்ளது.

டோக்கியோ,

ஜப்பானின் பிறப்பு விகிதம் 2022 ஆம் ஆண்டில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக 1.26 ஆகக் குறைந்துள்ளது என்று அந்நாட்டு காதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அரசு பல சலுகைகளை அறிவித்தாலும் குழந்தை பெற்றுக்கொள்வது குறைந்து வருகிறது. இதனால் வரும் 2030-க்குள் ஜப்பானின் மக்கள்தொகை அதல பாதாளத்திற்கு சென்று விடும் என அஞ்சப்படுகிறது.

125 மில்லியனுக்கும் அதிகமான ஜப்பானின் மக்கள்தொகை 16 ஆண்டுகளாக குறைந்து வருகிறது. 2070ஆம் ஆண்டு 87 மில்லியனாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


Next Story