ஜப்பான் முதலீடுகளை வரவேற்கிறோம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


ஜப்பான் முதலீடுகளை வரவேற்கிறோம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

மருத்துவம், உணவு, மின் வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் ஜப்பான் முதலீடுகளை வரவேற்கிறோம் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

டோக்கியோ,

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் உள்ள ஜப்பானிய நிறுவனங்களை பட்டியலிட்டு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஜப்பான் முதலீட்டாளர்களை சிவப்புக் கம்பளம் விரித்து தமிழ்நாடு வரவேற்கிறது. மருத்துவம், உணவு, மின் வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் ஜப்பான் முதலீடுகளை வரவேற்கிறோம். தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளவும், சென்னை உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிகழ்வுக்கு ஜப்பான் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஜப்பான் நாட்டின் அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவியை அதிகம் பெறும் நாடு இந்தியா தான். இந்தியாவில் தமிழ்நாடு தான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக முன்னிலையில் விளங்குகிறது. உற்பத்தி சார்ந்த துறைகள் மட்டுமின்றி மேம்பாட்டு திட்டங்களிலும் முதலீடு செய்ய அழைக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாண துணை ஆளுநர் நோபுஹிகோ யமாகுஜியுடன் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.


Next Story