ஜன்னலில் விரிசல்; ஜப்பான் விமானம் அவசரமாக தரையிறக்கம்


ஜன்னலில் விரிசல்; ஜப்பான் விமானம் அவசரமாக தரையிறக்கம்
x

 Credit: Reuters Photo

விமானி அறையில் இருந்த ஜன்னலில் விரிசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

டோக்கியோ,

ஜப்பானின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஆல் நிப்பான் ஏர்வேஸின் (ஏஎன்ஏ) பயணிகள் விமானம் சப்போரோவில் இருந்து டோயாமாவுக்கு நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11.20 மணிக்கு பறந்து கொண்டிருந்தது. அதில் 63 பயணிகள் இருந்தனர்.

அப்போது விமானி அறையில் இருந்த ஜன்னலில் விரிசல் ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் சப்போரோ நியூ சிட்டோஸ் விமான நிலையத்தில் மதியம் 12.10 மணியளவில் தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதுடன், 63 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

1 More update

Next Story