கென்யா: எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு - 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம்


கென்யா: எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு - 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
x

Image Courtesy : AFP

தினத்தந்தி 3 Feb 2024 1:47 AM GMT (Updated: 3 Feb 2024 2:07 AM GMT)

எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைரோபி,

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவின் தலைநகர் நைரோபியில் செயல்பட்டு வரும் எரிவாயு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த எரிவாயு ஆலைக்கு அருகில் இருந்த குடியிருப்பு பகுதிக்கும் தீ பரவியதால் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக ஆலையில் இருந்த எரிவாயு டேங்க் வெடித்ததாக தகவல் வெளியான நிலையில், எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி வெடித்ததே தீ விபத்திற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story