ரிஷி சுனக் முதல் உரையின்போது... பார்வையாளர்கள் கவனம் ஈர்த்த லேர்ரி பூனை


ரிஷி சுனக் முதல் உரையின்போது... பார்வையாளர்கள் கவனம் ஈர்த்த லேர்ரி பூனை
x
தினத்தந்தி 26 Oct 2022 6:27 AM GMT (Updated: 2022-10-26T12:46:03+05:30)

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் முதல் உரையின்போது, பார்வையாளர்கள் சுற்றி சுற்றி லேர்ரி பூனையை படமெடுத்தனர்.லண்டன்,


இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்பு, இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் ஆற்றிய முதல் உரையின்போது, லேர்ரி பூனையும் அந்த பகுதியில் ஓரத்தில் நின்றிருந்தது. அது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இங்கிலாந்து அமைச்சரவை அலுவலகத்திற்கு என அதிகாரப்பூர்வ பூனை உள்ளது. அதனை சீப் மவுசர் என அழைக்கின்றனர். இங்கிலாந்து பிரதமராக வருபவர் சீப் மவுசராக பூனையை நியமிக்கும் அதிகாரம் பெறுகிறார்.

இந்த சீப் மவுசராக உள்ள லேர்ரி என்ற பூனை பெயரில் டுவிட்டர் கணக்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரிஷி சுனக் புதிய பிரதமராக பதவியேற்ற பின்பு முதன்முறையாக உரையாற்றியபோது, லேர்ரி பூனை அந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டது. தெரு விளக்கு ஒன்றின் கீழ் அது அமர்ந்து கொண்டது.

இதுபற்றி சீப் மவுசர் டுவிட்டரில் வெளியிடப்பட்ட செய்தியில், எனது பழைய நண்பர் பைசல் இஸ்லாம், இந்த பகுதியில் உண்மையான தலைவராக (பாஸ்) இடம் பெறுவதற்கான விசயங்களை உறுதி செய்துள்ளார் என தெரிவித்து உள்ளது. இந்த புகைப்படத்திற்கு பலரும் விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.

அதில் ஒரு பயனாளர், ஒரு பெண்மணி தனது மொபைல் போனில் லேர்ரி பூனையை படமெடுக்கிறார். ரிஷியை அல்ல. அதனை நான் விரும்புகிறேன் என தெரிவித்து உள்ளார். மற்றொருவர் நகைச்சுவையாக, லேர்ரி. உன்னை காவல் துறை அதிகாரி ஒருவர் கவனமுடன் கண்காணிக்கிறார் என தெரிவித்து உள்ளார்.

லேர்ரி மீது அன்பு செலுத்துகிறோம் என வேறொருவரும், லேர்ரி பூனையை மக்கள் எப்படி படங்களாக எடுத்து தள்ளுகிறார்கள் என்பது அறிந்து நாங்களும் கூட அன்பு செலுத்துகிறோம். டவுனிங் ஸ்ட்ரீட்டின் உண்மையான முக்கிய பிரமுகர் லேர்ரியே என்றும் சிலர் தெரிவித்து உள்ளனர்.

டிரஸ்சின் பதவி விலகலை தொடர்ந்து லேர்ரி பூனை சார்பில் வெளியான செய்தியில், அரசர் மூன்றாம் சார்லஸ், என்னை நாட்டின் பிரதமர் பதவியை ஏற்று கொள்ளும்படி கூறியிருக்கிறார்.

ஏனெனில், இந்த முட்டாள்தனம் நீண்ட நாட்களாக நீடித்து கொண்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இங்கிலாந்தில் இதுபோன்ற பல்வேறு நெருக்கடியான தருணங்களில் லேர்ரி தி கேட் பெயரிலான டுவிட்டர் செய்தியில், எப்போதும் நகைச்சுவையான தகவல்களை வெளியிடுவது வழக்கம் ஆகும்.
Next Story