மாலத்தீவு அதிபர், வெளியுறவு அமைச்சக இணையதளங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தன


மாலத்தீவு அதிபர், வெளியுறவு அமைச்சக இணையதளங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தன
x

கோப்புப்படம்

தினத்தந்தி 7 Jan 2024 5:57 AM IST (Updated: 7 Jan 2024 12:32 PM IST)
t-max-icont-min-icon

தேசிய தகவல் தொழில்நுட்ப மையம் இந்த சிக்கலை தீர்க்க தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாலி,

மாலத்தீவின் அதிபர், வெளியுறவு அமைச்சகம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் செயலிழந்து, பல மணி நேரம் முடங்கின.

அரசாங்கத்தின் உயர்மட்ட இணையதளங்கள் வேலை செய்யாததற்கான காரணங்கள் கண்டறியப்படாமல் இருந்து வந்தது. மேலும், தேசிய தகவல் தொழில்நுட்ப மையம் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள் இந்த சிக்கலை தீர்க்க தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாலத்தீவு அரசாங்கத்தின் முக்கிய இணையதளங்கள் தற்போது மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story