நார்வே நாட்டின் பள்ளி வகுப்பறைகளை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்


நார்வே நாட்டின் பள்ளி வகுப்பறைகளை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்
x

நார்வே நாட்டின் பள்ளி வகுப்பறைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டார்.

ஓஸ்லோ,

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டென்மார்க், சுவீடன், நார்வே ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த நாடுகளில் உள்ள கல்வி முறை, பாடத்திட்டங்கள், பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து அன்பில் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது நார்வே நாட்டிற்கு சென்றுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அங்குள்ள பள்ளிகளின் வகுப்புகள் மற்றும் ஆய்வகங்களை நேரில் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து பள்ளி வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து கற்பித்தல் முறையை பார்வையிட்ட அவர், அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடி தமிழ்நாடு குறித்த அறிமுகத்தை அவர்களுக்கு வழங்கினார்.


Next Story