நேபாளத்தில் மாயமான இந்திய மலையேறும் வீரர் அனுராக் மாலூ மீட்பு


நேபாளத்தில் மாயமான இந்திய மலையேறும் வீரர் அனுராக் மாலூ மீட்பு
x

நேபாளத்தில் காணாமல் போன இந்திய மலையேறும் வீரர் அனுராக் மாலூ உயிருடன் மீட்கப்பட்டார்.

காத்மண்டு,

ராஜஸ்தானின் கிஷன்கரைச் சேர்ந்த அனுராக் மாலூ என்பவர், நேபாளத்தின் அன்னபூர்ணா மலையின் மூன்றாம் முகாமில் இருந்து இறங்கும் போது, ஆறாயிரம் மீட்டர் உயரத்தில் இருந்து தவறி விழுந்து கடந்த 17ஆம் தேதி மாயமானார்.

ஐந்து பேர் கொண்ட குழுவினர், வான்வெளி தேடுதல் மூலம் மாலூவை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே, உயிருடன் மீட்கப்பட்ட மாலூ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, அனுராக் மாலூவின் சகோதரர் ஆஷிஷ் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story