கனடாவில் 16 பேருக்கு குரங்கு காய்ச்சல்


கனடாவில் 16 பேருக்கு குரங்கு காய்ச்சல்
x

கோப்புப்படம்

கனடாவில் 16 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒட்டவா,

குரங்கு காய்ச்சல், மேற்கத்திய நாடுகளில் பரவி வருகிறது. கனடாவில் 16 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளான 16 பேரும் அங்குள்ள கியூபெக் மாகாணத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

பாதிப்புக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டு, உள்ளூர் கிளினிக்குகளில் சிகிச்சை பெறுவதாக கனடா பொது சுகாதார முகமை கூறுகிறது. அவர்களிடம் பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, கியூபெக் மாகாணத்துக்கு பொது சுகாதார முகமை சிறிய அளவில 'இம்வாமுனே' தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

1 More update

Next Story