டுவிட்டரில் புதிய அப்டேட்: விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்ப்பு


டுவிட்டரில் புதிய அப்டேட்: விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்ப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 2 Sep 2022 9:53 AM GMT (Updated: 2022-09-02T15:30:58+05:30)

டுவிட்டர் பயனாளர்களின் நீண்ட கால கோரிக்கையான எடிட் பட்டன் வசதியை சோதித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கலிபோர்னியா,

தற்போது டுவீட்டரில் பதிவிட்ட ஒரு கருத்தில் தவறு இருந்தால் எடிட் செய்ய முடியாது. இந்த வசதியை விரைவில் கொண்டுவருமாறு பயனாளர்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், டுவிட்டர் பயனாளர்களின் நீண்ட கால கோரிக்கையான எடிட் பட்டன் வசதியை சோதித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் கட்டண சந்தாதாரர்களுக்கு எடிட் பட்டன் வசதியை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கிறது.

அதன்படி ப்ளூ பயனர்கள் இருக்கும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா மற்றும் அமெரிக்காவில் இந்த வசதி விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story