அமெரிக்காவில் பிளாஸ்டிக் பயன்படுத்த கடும் கட்டுப்பாடு..!


அமெரிக்காவில் பிளாஸ்டிக் பயன்படுத்த கடும் கட்டுப்பாடு..!
x

கோப்புப்படம்

அமெரிக்காவில் பிளாஸ்டிக்கை பயன்படுத்த கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்,

அமெரிக்காவில் ஆண்டுதோறும் 32 கோடி டன்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் 95 சதவீதம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள் என நுகர்வோர் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு கமிட்டியின் அறிக்கை கூறுகிறது.

இந்தநிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றான நியூயார்க்கில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஓட்டல்கள் மற்றும் உணவு வினியோக நிறுவனங்களில் பிளாஸ்டிக் டப்பாக்கள், கரண்டி மற்றும் கத்திகள் போன்றவற்றை வாடிக்கையாளர் கேட்காமல் வழங்கக்கூடாது. இதனை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகளை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அந்த நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கூறினார்.


Next Story