100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்படுத்த நியூசிலாந்து திட்டம்: ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு


100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்படுத்த நியூசிலாந்து திட்டம்: ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 8 Aug 2023 10:44 PM GMT (Updated: 9 Aug 2023 7:48 AM GMT)

இந்த திட்டத்துக்காக சுமார் ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு எரிசக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெலிங்டன்,

காலநிலை மாற்றம் காரணமாக உலக சராசரி வெப்பநிலை அதிகரித்து வருகிறது. அதனை குறைப்பதற்கு உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை எட்டிய முதல் நாடாக மாற்றுவதற்கு நியூசிலாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக காலநிலை மாற்ற தொழில்நுட்பத்தில் உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான பிளாக்ராக் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் அறிவித்தார். இதன் மூலம் காற்று, பசுமை ஹைட்ரஜன் மற்றும் சூரிய ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படுவதால் கார்பன் உமிழ்வு குறைக்கப்படும்.

மேலும் அன்னிய முதலீடு அதிகரித்து நாட்டின் பொருளாதாரம் மேம்படும். எனவே இந்த திட்டத்துக்காக சுமார் ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக எரிசக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story