பிரபஞ்ச அழகியாக தேர்வான நிகரகுவா நாட்டு பெண்


பிரபஞ்ச அழகியாக தேர்வான நிகரகுவா நாட்டு பெண்
x
தினத்தந்தி 19 Nov 2023 9:23 AM GMT (Updated: 19 Nov 2023 9:26 AM GMT)

நிகரகுவா நாட்டைச் சேர்ந்த ஷென்னிஸ் பலாசியஸ் என்ற பெண் 2023-ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டம் வென்றுள்ளார்.

சான் சால்வடார்,

எல் சால்வடார் நாட்டின் தலைநகர் சான் சால்வடாரில் உள்ள ஜோஸ் அடோல்ஃபோ அரங்கில் இன்று (நவம்பர் 19) 72 வது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஸ்வேதா ஷர்தா உள்ளிட்ட சுமார் 90 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் நிகரகுவா, ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்கள் இறுதி மூன்று இடங்களுக்குள் நுழைந்தனர். இந்தியப் போட்டியாளர் ஸ்வேதா ஷர்தா அரையிறுதிக்குத் தகுதி பெற்று முதல் 20 இடங்களுக்குள் இடம்பிடித்தார். இருப்பினும், நீச்சலுடை சுற்றுக்குப் பிறகு அவரால் முதல் 10 இடங்களுக்குள் நுழைய முடியவில்லை.

இதில் நிகரகுவா நாட்டைச் சேர்ந்த பெண் ஷென்னிஸ் பலாசியஸ் வெற்றி பெற்றார். அவருக்கு 2022 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற அமெரிக்காவின் கேப்ரியல் முடிசூட்டினார். இந்த போட்டியில் குவாத்தமாலா நாட்டைச் சேர்ந்த மிஷேல் கான் மற்றும் கொலம்பியாவைச் சேர்ந்த மரியா கமிலா ஆகியோர் பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்ற முதல் திருமணமான பெண்கள் ஆவர்.


Next Story