நைஜீரியா: பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் பலி; 9 பேர் காயம்


நைஜீரியா:  பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் பலி; 9 பேர் காயம்
x

நைஜீரியாவில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் பலியாகி உள்ளனர். 9 பேர் காயமடைந்தனர்.அபுஜா,

நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் லாகோஸ்-இபடான் நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், திடீரென அந்த பஸ் தீப்பிடித்து உள்ளது.

இதுபற்றி அந்நாட்டின் தெற்கே அமைந்த ஆகன் மாகாணத்தின் மத்திய சாலை பாதுகாப்பு படையின் உயரதிகாரி அகமது உமர் கூறும்போது, ஆகிர் நகரில் சென்று கொண்டிருந்த பஸ் இயந்திர கோளாறால் தீப்பிடித்து உள்ளது.

இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர். 9 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார். அவர் தொடர்ந்து கூறும்போது, ஓட்டுனர்கள் வாகனங்களை வெளியே எடுக்கும்போது, அது சாலையில் செல்வதற்கு ஏற்ற வகையிலும் மற்றும் பயணிகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையிலும் உள்ளது என அனைத்து காலங்களிலும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.


Next Story