வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை - தென்கொரியா, அமெரிக்கா கூட்டு பயிற்சிக்கு பதிலடி...!


வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை - தென்கொரியா, அமெரிக்கா கூட்டு பயிற்சிக்கு பதிலடி...!
x

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

சியோல்,

அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

இதனிடையே, கொரிய தீபகற்பத்தில் தென்கொரியா - அமெரிக்கா இணைந்து இன்று கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டது. அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானமான பி1-பி விமானமும் இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்நிலையில், தென்கொரியா - அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சிக்கு பதிலடியாக வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. வடகொரியாவின் ஏவுகணை தென்கொரியாவின் கிழக்கு கடற்பகுதியில் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


Next Story