சீன அதிபராக ஜின்பிங் 3-வது முறையாக தேர்வு - வட கொரிய அதிபர் கிம் வாழ்த்து


சீன அதிபராக ஜின்பிங் 3-வது முறையாக தேர்வு - வட கொரிய அதிபர் கிம் வாழ்த்து
x

சீன அதிபராக 3-வது முறையாக தேர்வாகியுள்ள ஷீ ஜின்பிங்கிற்கு ரஷிய அதிபரும், வட கொரிய அதிபரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பியாங்யாங்,

சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே அதிபராக இருப்பார்.

இதனப்டி சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16-ந்தேதி தலைநகர் பிஜீங்கில் தொடங்கி, ஒரு வாரம் நடைபெற்றது. இதில் ஜின்பிங் மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இதன் மூலம் ஜின்பிங் 3-வது முறையாக சீனாவின் அதிபராக தேர்வானார். சீன அதிபராக 3-வது முறையாக தேர்வாகியுள்ள ஷீ ஜின்பிங்கிற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "நமது நாடுகளுக்கிடையேயான மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் எங்கள் ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் நெருக்கமான, பொதுவான பணிகளைத் தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

அதே போல் வட கொரிய அதிபர் கிம், சீன அதிபருக்கு எழுதிய வாழ்த்து கடிதத்தில், இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்காலத்தை கட்டமைப்போம் என தெரிவித்துள்ளார்.


Next Story