இந்தியாவை ஒரு போட்டியாளராக சீனா பார்க்கவில்லை - சீன தூதர்


இந்தியாவை ஒரு போட்டியாளராக சீனா பார்க்கவில்லை - சீன தூதர்
x

எந்தவொரு புவிசார் சிக்கல்களையும் இந்தியாவும் சீனாவும் நெருக்கமாக இணைந்து தீர்க்கமுடியும் என்று தெரிவித்தார்.

டாக்கா,

வங்கதேசத்துக்கான சீன தூதர் லி ஜிமிங் தலைநகர் டாக்காவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது, "சீனா ஒருபோதும் இந்தியாவை ஒரு போட்டியாளராகவோ அல்லது எதிரியாகவோ பார்க்கவில்லை. எந்தவொரு பொருளாதார, புவிசார் அரசியல் மற்றும் பிற சிக்கல்களைத் தீர்க்க இந்தியாவும் சீனாவும் நெருக்கமாக இணைந்து செயல்பட முடியும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை நடந்த தனது பிரியாவிடை நிகழ்ச்சியில் பேசிய இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் தெரிவித்த கருத்தை சீன தூதர் லி ஜிமிங் டாக்காவில் பேசியபோது மீண்டும் வலியுறுத்தினார்.

இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் கூறியதாவது:- சீனா-இந்தியா ஆகிய இரு நாடுகளும் பரஸ்பர அரசியல் அமைப்புகளையும் வளர்ச்சிப் பாதைகளையும் மதிக்க வேண்டும். இந்தியா-சீனா இரண்டும் புவிசார் அரசியல் பொறியில் இருந்து வெளியேறி, கடந்த காலத்தை போல அல்லாமல் புதிய பாதையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார்

பணியிலிருந்து ஓய்வுபெற்ற இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங்கை மத்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ் ஜெய்சங்கர், சந்தித்துப் பேசினார். அப்போது, "இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கு எல்லைப் பகுதிகளில் அமைதியும், அமைதியும் அவசியம்" என்று ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.


Next Story