ஈரானில் 16 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய அணுமின் நிலையம் - கட்டுமான பணிகள் துவக்கம்


ஈரானில் 16 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய அணுமின் நிலையம் - கட்டுமான பணிகள் துவக்கம்
x

ஈரானின் 300 மெகாவாட் திறன் கொண்ட புதிய அணுமின் நிலையம் அமைக்கப்படுகிறது.

டெஹ்ரான்,

சர்வதேச சூழலில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மை மற்றும் எதிர்வரும் காலத்தில் ஏற்படக்கூடிய இயற்கை எரிவாயு தட்டுப்பாடு உள்ளிட்டவற்றை சமாளிக்கும் வகையில் அணுசக்தி ஆற்றலை பயன்படுத்த உலக நாடுகள் திட்டமிட்டு வருகின்றன.

அந்த வகையில் ஈரானில் தற்போது 2 பில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய்) செலவில் 'கரூன்' என்ற பெயரில் புதிய அணுமின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஈரானின் தென்மேற்கு மாகாணமான குசெஸ்தானில் இந்த அணுமின் நிலையம் அமைக்கப்படுகிறது.

இது குறித்து ஈரான் அணுசக்தி கழகத்தின் தலைவர் முகமது எஸ்லாமி கூறுகையில், கரூன் அணுமின் நிலையம் 300 மெகாவாட் திறன் கொண்டதாக இருக்கும் என்றும், இதில் எரிபொருளாக செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆக்சைடு பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த அணுமின் நிலையத்தின் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வர 8 ஆண்டுகள் ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story