ஆஸ்கர் விருது வென்ற அமெரிக்க நடிகர் மீது பாலியல் வழக்கு.. 2015ல் சம்பவம் நடந்ததாம்


ஆஸ்கர் விருது வென்ற அமெரிக்க நடிகர் மீது பாலியல் வழக்கு.. 2015ல் சம்பவம் நடந்ததாம்
x

மன்ஹாட்டனில் உள்ள ஒரு பாரின் மேல்தளத்தில் வைத்து, பாக்ஸ் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

நியூயார்க்:

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகர் ஜேமி பாக்ஸ் (வயது 55). காமெடியன், பாடகர் என பன்முகத் திறமை கொண்ட இவர் சிறந்த பாடகருக்கான கிராமி விருது பெற்றுள்ளார். 2005 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற இசைக்கலைஞரான ரே சார்லஸ் வாழ்க்கை வரலாறு தொடர்பான 'ரே' என்ற திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றார்.

இந்நிலையில், ஜேமி பாக்ஸ் மீது ஜேன் டோ என்ற பெண், பாலியல் வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது 2015 இல் இந்த சம்பவம் நடந்ததாக மனுவில் கூறியிருக்கிறார்.

"மன்ஹாட்டனில் உள்ள ஒரு பாரின் மேல்தளத்தில் வைத்து, பாக்ஸ் எனது அனுமதியின்றி என்னை தொட்டதுடன், வலுக்கட்டாயமாக அந்தரங்க உறுப்புகளை பிடித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்" என்று அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

இதேபோல் புகழ்பெற்ற பாடகர் ஆக்சல் ரோஸ் ( 61 வயது) மீது நடிகையும் மாடலுமான ஷீலா கென்னடி வழக்கு தொடர்ந்துள்ளார். 1989ஆம் ஆண்டு ஆக்சல் ரோஸ், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியிருக்கிறார். இருவரும் இரவு விடுதியில் சந்தித்தபின், நியூயார்க் ஓட்டல் அறையில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் புதிதாக நடைமுறைக்கு வந்த நியூயார்க் அடல்ட் சர்வைவர்ஸ் ஆக்ட் என்ற சட்டத்தின்கீழ் நியூயார்க் நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த சட்டம் கடந்த ஆண்டு மே மாதம் கையொப்பமிடப்பட்டது. பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்கள், வழக்கு தொடருவதற்கான கால வரம்பு காலாவதியாகிவிட்டாலும், அவர்கள் மீது மீண்டும் வழக்கு தொடர இந்த புதிய சட்டம் அனுமதிக்கிறது.


Next Story