காசா முனையில் அகதிகள் முகாமை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்: 70 பேர் பலி


காசா முனையில் அகதிகள் முகாமை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்: 70 பேர் பலி
x

ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முற்றிலும் அழிக்கும் வரை தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் கூறுகிறது.

காசா:

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலின் உச்சகட்டமாக கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் மிகப்பெரிய அளவிலான ராக்கெட் தாக்குதலை நடத்தினர். அத்துடன், இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களை கொன்று குவித்தனர். 240 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து காசா முனைக்கு கொண்டு வந்துவிட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் தரப்பு இதுவரை இல்லாத அளவுக்கு உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முற்றிலும் அழிக்கும் வரை தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் கூறுகிறது.

இந்நிலையில், காசா முனையில் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை இஸ்ரேல் படைகள் நடத்திய அதிரடி தாக்குதல்களில் 70க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன ஊடகம் தெரிவித்துள்ளது. டேர் அல்-பலாஹ் நகரின் ஜவைதா பகுதியில் உள்ள அகதிகள் முகாமை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

காசா முனையில் இதுவரை 28,900 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.


Next Story