ரூ.1.40 லட்சம் கோடியாக உயர்கிறது பாகிஸ்தான் ராணுவ பட்ஜெட்...!


ரூ.1.40 லட்சம் கோடியாக உயர்கிறது பாகிஸ்தான் ராணுவ பட்ஜெட்...!
x

பாகிஸ்தான் ராணுவ பட்ஜெட் ரூ.1.40 லட்சம் கோடியாக உயர்கிறது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறது. அதற்கு மத்தியிலும் அதன் ராணுவ பட்ஜெட் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக உயர்கிறது. இது முந்தைய ஆண்டைக்காட்டிலும் ரூ.8,300 கோடி அதிகம் ஆகும். அதாவது கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு ராணுவ பட்ஜெட் ஒதுக்கீடு 6 சதவீதம் அதிகம் ஆகும்.

உயர்த்தப்படுகிற ராணுவ பட்ஜெட்டில் பெருந்தொகை, ராணுவ வீரர்கள் செலவினங்கள், சம்பளம், படிகள் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் ஒரு ராணுவ வீரருக்கு ஆண்டுக்கு ரூ.26.5 லட்சம் செலவிடப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

1 More update

Next Story