பிலிப்பைன்சில் ராணுவ தாக்குதலில் 5 கிளர்ச்சியாளர்கள் பலி


பிலிப்பைன்சில் ராணுவ தாக்குதலில் 5 கிளர்ச்சியாளர்கள் பலி
x

கோப்புப்படம்

பிலிப்பைன்சில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 கிளர்ச்சியாளர்கள் பலியாகினர்.

மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக புதிய மக்கள் ராணுவம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவர்கள் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துதல், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த அமைப்பினருக்கும், அரசாங்கத்துக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் நீக்ரோஸ் ஆக்சிடென்டல் மாகாணத்தில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடைபெறுவதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவ வீரர்கள் அங்கு சென்று கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் 5 கிளர்ச்சியாளர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் அங்கிருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை ராணுவத்தினர் கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story